2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது
இந்நிலையில் நாட்டில் நிலவி வரும் அமெரிக்க டொலர் தட்டுப்பாட்டினால் குறித்த நிலைமை உருவாகியுள்ளது.
அத்துடன் பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு முடியாத நிலைமை உரவாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த சாதாரண தரப் பரீட்சையை கோவிட் காரணமாக மே மாதம் 23ம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் இந்த பரீட்சையில் தோற்றவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



