கப்பல்களில் கொண்டுவரப்பட்டுள்ள எரிபொருளை இறக்கும் பணிகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.
இதனால், நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான தேவை இல்லையென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை எரிபொருள் பிரச்சினை எதிர்வரும் தினங்களில் தீர்க்கப்படும் என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
மேலும் எரிபொருள் மற்றும் மின்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.



