மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட விசேட அறிவிப்பு.

0

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையங்கள் மற்றும் நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு மத்திய வங்கியை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களை கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல் மற்றும் மாற்றுதல் என்பன அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் மாத்திரமே மேற்கொள்ள முடியும்.

அத்துடன் ஏதாவது ஒரு நிறுவனம் அல்லது நபர்கள் மத்திய வங்கியின் அனுமதியின்றி வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவார்களாயின் அது சட்ட விரோதமான செயற்பாடாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply