எதிர்வரும் நாட்களில் தொடர்ந்து சேவைகளுக்கு பாதிப்பு.

0

நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் தொடர்ந்து சேவை பாதிப்பதற்கு வாய்ப்புள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தொடர்ந்துகளை இயக்குவதற்காக மூன்று நாட்களுக்கு மாத்திரமே போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது.

இதன் பிரகாரம் சில மட்டுப்படுத்தல்களுடன் தொடருந்து சேவைகள் முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு யோசனை முன்வைக்கப்பட்டது.

மேலும் எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டால் குறித்த பிரச்சனை ஏற்படும் என தொடர்ந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply