10 ரூபாய் பன்னீர் ரோஜா இருந்தால் போதும்…!!

0

அவசரத் தேவைக்கு கையில் பணம் இல்லை. பற்றாக்குறை நிலைமை வந்துவிட்டது.

இந்த பஞ்சத்தை நீக்க தாந்திரீக ரீதியாக என்ன செய்யலாம்.

10 ரூபாய் கொடுத்து பன்னீர் ரோஜா வாங்கிக் கொள்ளுங்கள்.

அந்த ரோஜாப்பூக்களை மகாலட்சுமியின் பாதங்களில் முதலில் வையுங்கள்.

மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

இந்த பண கஷ்ட நேரத்தில் எனக்கு மகாலட்சுமி தாயாரான நீ தான் உதவி செய்ய வேண்டும்.

ஏதாவது ஒரு ரூபத்தில் எனக்கு பணம் வரக்கூடிய வழியை காட்ட வேண்டும். என்று மனமுருகி வேண்டிக் கொண்டு மகாலட்சுமி பாதங்களில் இருக்கும் வெறும் 3 பன்னீர் ரோஜாக்களை மட்டும் எடுத்து நீங்கள் பீரோவில் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள்.

இந்த பன்னீர் ரோஜாவில் இருந்து வெளிவரும் வாசத்திற்கு அவ்வளவு ஒரு சக்தி உண்டு.

நம்மை சுற்றி இருக்கும் நெகட்டிவ் எனர்ஜியை வெளியே தள்ளிவிட்டு, பாசிட்டிவ் எனர்ஜியை கொடுத்து நல்லது நடப்பதற்கு தேவையான அத்தனை வேலைகளும் நொடிப்பொழுதில் செய்யும் சக்தி இயற்கையாகவே இந்த பூவுக்கு உண்டு.

(அந்தப் பூ வாடி விட்டால் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அந்த பூவை எடுத்த கால் படாத இடத்தில் போட்டு விடலாம்.)

மீதமிருக்கும் பன்னீர் ரோஜாக்களை ஒரு செம்பு தட்டிலோ அல்லது செம்பு உருலியிலோ கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீரில் இந்த ரோஜாவை போட்டு அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

இந்த பன்னீர் ரோஜாவின் வாசம் உங்களுடைய பண கஷ்டத்தை போக்கும் என்று நம்ப முடியவில்லையா.

நம்பிக்கையோடு செய்தால் நம்ப முடியாத பரிகாரமும், நல்ல பலனைக் கொடுக்கும். இந்தப் பிரபஞ்சம் பரிகாரத்தை எதிர்பார்ப்பதை விட, அதில் வைத்திருக்கும் நம்பிக்கையை தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

நீங்கள் இந்த பிரபஞ்சத்தை எந்த அளவிற்கு நம்பி பரிகாரத்தை செய்கிறீர்களோ, அந்த அளவிற்கு உண்டான பலனை உங்களுக்கு இந்த பிரபஞ்சமானது கொடுத்துக்கொண்டே இருக்கும்.

அதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் பரிகாரத்தை செய்து பலன் அடையலாம் என்ற கருதுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Leave a Reply