சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சி.

0

தற்போது சந்தையில் முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சந்தையில் ஒரு முட்டை 12 ரூபாய் முதல் 16 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முட்டை விலை வீழ்ச்சி காரணமாக தமது தொழிலை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட முட்டை உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த பண்டிகைக் காலத்தில் முட்டை ஒன்று ரூ.28 முதல் 32 வரை விற்பனை செய்யப்பட்டதால் உற்பத்தியாளர்களின் வருமானம் அதிகரித்தது.

மேலும் கால்நடைத் தீவனங்களின் விலையேற்றம் காரணமாக தமது கைத்தொழிலை முன்னெடுப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave a Reply