தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.

0

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அத்துடன் தமிழகம் முழுவதும் மொத்தம் 2 கோடியே 83 லட்சம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 35.34 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாநகராட்சிகளில் 28.50 சதவீதமும், நகராட்சிகளில் 41.13 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.

பேரூராட்சி பகுதிகளில் 46.92 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 23.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply