டெங்கு ஒழிப்பு உதவியாளர்களால் சுகாதார அமைச்சின் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கைவிடப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 21 ஆம் திகதி சந்திப்பொன்றை நடத்துவதாக எழுத்து மூலம் வாக்குறுதி வழங்கப்பட்டது.
இதன் பிரகாரம் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
மேலும் டெங்கு நுளம்பு ஒழிப்பு உதவியாளர், 1,169 பேரின் பதவிகளை நிரந்தரமாகுமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



