இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்குமாறு கோரி குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் பிரகாரம் இந்தப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
மேலும் மீனவர்களின் இந்த பணி புறக்கணிப்பு காரணத்தால் நாள் ஒன்றுக்கு இந்திய மதிப்பில் 10 கோடி ரூபா வருமானம் இல்லாத போகும் நிலை ஏற்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



