மக்களின் பாதுகாப்பு கருதி நாடுபூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களில் கொவிட் தடுப்பு செயலுக்கியை பெற்றுக்கொள்வதில் பொதுமக்களிடம் தற்போது ஆர்வம் அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது ஒரு சிறந்த விடயமாகும் .
அனைவரும் கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியினை செலுத்துவது அவசியமாகும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.



