பேருந்து கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இடம்பெறாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எரிபொருள் மற்றும் உதிரி பாகங்களின் விலைகளின் அடிப்படையில் விலை சூத்திரம் ஒன்று உள்ளது.
இதன் அடிப்படையில் பேருந்துக் கட்டணங்களை குறைப்பதற்கான சந்தர்ப்பம் இருந்த போதிலும் கொவிட் பெரும் தொற்று காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ள பேருந்து உரிமையாளர்கள் நலனைக் கருத்திற்கொண்டு அதனை நடைமுறைப் படுத்தவில்லை.
அத்துடன் இறுதியாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்க பட்டாலும் தமது கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என சகல சங்கங்களின் பிரதிநிதிகளும் உறுதியளித்துள்ளனர்.
ஆகவே பேருந்து வட்டாரங்களில் எந்தவித திருத்தங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்



