இந்திய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நின்று கொண்டு தமிழ்நாட்டின் தனிச்சிறப்பை இந்த இனத்தின் பெருமையை மிகச் சிறந்த சொற்களால் இந்திய நாட்டுக்கே அறிவித்த ஆருயிர் சகோதரர் ராகுல் காந்திக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனித்தன்மையும், பண்பாடும், அறநெறியும் கொண்ட தமிழ் புலத்தின் பெருமையை அகில இந்திய தலைவர்கள் உணரவில்லையே என்றுதான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் , முத்தமிழறிஞர் கலைஞரும் வருந்தினார்கள்.
கவலையை போக்கும் வகையில் ராகுல்காந்தி பேச்சு அமைந்துள்ளது.
அத்துடன் இந்திய துணைக் கண்டம் முழுமைக்கும் தமிழ் நெறி செல்லட்டும்.
சகோதரர் ராகுல் காந்தியின் உரத்த சிந்தனைக்கு உணர்வு பூர்வமான நன்றிகள் என முதலமைச்சர் மு க ஸ்டாலினால் விடுக்கப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



