பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவசர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சத்திரசிகிச்சை காரணமாக பிரதமரால் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், பிரதமரின் வாழ்த்துச் செய்தியை தெரிவித்ததாக அவர் கூறினார்.
இதேவேளை, பிரதமருக்கு கொழும்பு நவலோக வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதிலளித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவுக்கு எவ்வித சத்திரசிகிச்சையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், அவருடன் அவரது தந்தை நவலோக வைத்தியசாலைக்கு நோயாளி ஒருவரை பார்க்க சென்றதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



