எதிர்வரும் நாட்கள் மிகவும் ஆபத்தானவை!

0

இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள கோவிட்-19 நோயாளர்களில் 90 வீதமானோர் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளதை ஆய்வக அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை 100 வீதமாக அதிகரிக்கும் என எச்சரித்துள்ள சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன, அதனை நாட்டின் சுகாதார கட்டமைப்பினால் நிர்வகிக்க முடியாமல் போகும் ஆபத்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இருப்பினும் இதனை நிராகரித்துள்ள சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல, எந்தவொரு புதிய விகாரமடைந்த வைரஸ்சும் நாட்டிற்குள் பிரவேசிக்குமாயின் அதனை கட்டுப்படுத்தும் திறன், சுகாதார கட்டமைப்புக்கு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று பரவல் காரணமாக இலங்கையில் தொற்றுக்குள்ளாகும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கம் கூறியுள்ளது.

Leave a Reply