மாணவர்களுக்கு பாடசாலையை விட பெற்றோரிடமிருந்து கொவிட் தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குழந்தை சுவாச நோய் வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கொவிட் தொற்று போன்று டெங்கு நோய்க்கான அறிகுறிகளும் காணப்படுகின்றன.
அவ்வாறான நோய் அறிகுறிகள் தமது பிள்ளைகளுக்கு காணப்படுமாயின் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுமாறு பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பது மிக அவசியமானது என்பதால் தனது பிள்ளைகளுக்கான பொறுப்புகளை பெற்றோர்கள் நிறைவேற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.



