தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு.

0

சில வாரங்களாக தங்கத்தின் விலை குறைவடைந்து வருகின்றது.

இதனால் பவுன் ரூபா.37 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற தாழ்வு இருந்து வருகின்றது.

இதற்கமைய நேற்றைய தினம் தங்கம் ஒரு பவுன் ரூபா 36 ஆயிரத்து 840 க்கும் ஒரு கிராம் ரூபாய் 4 ஆயிரத்து 605 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கம் இன்று மீண்டும் பவுன் ரூபா 37 ஆயிரத்தை தாண்டியது.

அத்துடன் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 256 அதிகரித்து ரூ 37 ஆயிரத்து 96 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் கிராமுக்கு ரூபா 32 உயர்வடைந்து ரூபா 4 ஆயிரத்து 637 ஆக உள்ளது.

அவ்வாறு தங்கத்தைப் போன்று வெள்ளி விலையும் உயர்வடைந்தது.

வெள்ளி கிலோவிற்கு ரூபாய் 300 அதிகரித்து ரூபா 68 ஆயிரத்து 500 ஆக உள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூபா 68.50க்கு விற்கப்படுகிறது.

கடந்த நவம்பர் மாத ஆரம்பத்தில் தங்கம் பவுன் ரூபா 36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

கடந்த நவம்பர் முதலாம் திகதி ஒரு பவுன் ரூபா 35 ஆயிரத்து 944 க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதன்பின்னர் விலை தொடர்ந்தும் உயர்வதால் பவுன் ரூப 36 ஆயிரத்தை தாண்டியே வந்த நிலையில் இன்று பவுன் ரூ 37 ஆயிரத்தை கடந்துள்ளது.

Leave a Reply