மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியா தலைநகர் மன்ரோவியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் புதன்கிழமை இரவு ஜெபக் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதன்போது ஆயுதங்களுடன் ஒரு கும்பல் ஒன்று தேவாலயத்திற்குள் நுழைந்துள்ளது.
அவர்கள் கொள்ளையடிப்பதற்காக அங்கு உட் புகுந்துள்ளனர்.
இந்நிலையில் தேவாலயத்தில் இருந்த மக்கள் தப்பி ஓடிச் சென்றனர் .
இதனால் அங்கு கடும் கூட்டல் நெரிசல் ஏற்பட்டது இதில் பலர் கீழே விழுந்தனர்.
அவர்கள் மீது மற்றவர்கள் ஏறி மிதித்தபடி வெளியேறினர்.
இந்தக் கூட்டத் தொடரில் சிக்கி 29 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
. இவ்வாறு குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
