கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரின் கொனஹேன முகாமிற்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 3 கிலோ 297 கிராம் கேரள கஞ்சாவும், போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டியதாக கருதப்படும்,40,000 ரூபாய் பணமும் இரண்டு தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன.
அத்துடன் ராகம பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ராகம காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.



