கொழும்பு துறைமுக நகர சூழலை பார்வையிட அதிகாரிகள் மக்களுக்கு அனுமதியை வழங்கினார்.
அதன் பின்னர் சுகாதார ஆலோசனைகள் அல்லது சமூக இடைவெளியை கவனத்திற் கொள்ளாது, அதிகளவிலான மக்கள் நேற்று தினம் துறைமுக நகரத்தை பார்வையிட சென்றனர்.
இந்நிலையில் அடுத்து வரும் தினங்களில் துறைமுக நகர கொவிட் கொத்தணி உருவாக வாய்ப்புள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இலங்கையில் தற்போது ஒமிக்ரோன் வைரஸ் தீவிரம் அடைந்து வருகின்றது.
இந்நிலையில் 160 க்கும் மேற்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடப்படுகிறது.



