நாட்டில் இந்த ஆண்டில் முதல் 15 நாட்களுக்குள் மாத்திரம் 5 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணம், கொலும்பு மற்றும் காலி ஆசிய பகுதிகளில் இருந்து, இந்த நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மலேரியா நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள மலேரியா நோயாளர்கள் 5 பேரும், ஆபிரிக்கா நாடுகளில் எந்த வருகை தந்தவர்கள் என மலேரியா நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் இருவர் யாழ்ப்பாணத்திலும் ஏனைய மூவர் கொழும்பு, கம்பஹா மற்றும் காலி ஆகிய மாவட்டங்கள் வசிப்பதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பிரகாரம் குறித்து அனைவரும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் கடந்த ஆண்டு நாட்டில் 27 நோயாளர்கள் பதிவாகியுள்ள வேளை, இந்த ஆண்டின் முதல் பதினைந்து நாட்களில் 05 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ள மை சிறப்பான விடயம் அல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.
