பாணாந்துறை கடற்கரையில் நேற்றைய தினம் மாலை தனது சகோதரர் மற்றும் தந்தையுடன் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இதற்கமைய குளித்துக் கொண்டிருந்த போது குறித்த மாணவன் ஓடையில் தவறி விழுந்து உள்ள நிலையில் தந்தையின் கழுத்தில் தொங்க முயற்சித்த போதிலும் அவர் காணாமல் போயுள்ளார்.
அத்துடன் பாணந்துறை எலுவில பகுதியை சேர்ந்த 16 வயது மாணவணே இவ்வாறு காணாமல் போயுள்ளான்.
மேலும் காவல்துறை உயிர் காப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்றிரவு விசேட தேடுதல் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.



