ஜனவரி மாதத்திற்கு டீசல் தேவையில்லை என்று கூறிய இலங்கை மின்சார சபை, கடந்த 11ஆம் திகதி எரிபொருளை கோரியதாக வலுசக்தி அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளை இலங்கை மின்சார சபைக்கு வழங்கினால், வாகனங்களுக்கு தேவையான எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மின் உற்பத்திக்காக எரிபொருள் வழங்கப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை மின்சார சபை டொலர்களை வழங்கினால் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்து வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



