சுகயீன விடுமுறையில் ஈடுபட தீர்மானிக்கும் தொழிற்சங்கத்தினர்.

0

இலங்கை மின்சார சபையின் புதிய பொது முகாமையாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுகயீ விடுமுறையில் ஈடுபட மின்சார பொறி யாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த சுகயீன விடுமுறை நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன் இலங்கை மின்சார சபையின் புதிய பொது முகாமையாளர் பதவிக்கு கடந்த 14 ஆம் திகதி புதிய நபர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

இதன் பிரகாரம் சட்டவிரோதமாக இவ்வாறு நியமிக்கப்பட்ட இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் அந்த பதவியில் இருந்து நீக்கப்படாவிட்டால் கடும் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை மின்சார சபை அண்மையில் குறிப்பிட்டிருந்தது.

Leave a Reply