சகல அமைச்சுக்களுக்கும், அரச நிறுவனங்களும் பாவனைக்கு உட்படுத்தும் காணி, வாகனம் மற்றும் கட்டணங்கள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்நிலையில் சகல அரச நிறுவனங்களிலும் இந்த விடயம் தொடர்பான தகவல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வார காலப் பகுதிக்குள் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சில அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு மேலதிகமாக மேலும் சில வாகனங்கள் வாடகைக்கு பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றை விட அரச நிறுவனங்களின் காணி மற்றும் கட்டடம் ஆகியன தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதால் , அது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



