கலைத்துறையில் சாதனை புரியும் கலைஞர்களுக்கு முன்னணி பல்கலைக்கழகங்கள் கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவது வழமையான விடயம்.
இதன் பிரகாரம் நடிகர் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது.
குறித்த நிகழ்ச்சியை நடிகர் சிம்புவுடன் அவருடைய தாய் மற்றும் தந்தை கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சிலம்பரசன், எல்லோருக்கும் நன்றி, என்னுடன் டாக்டர் பட்டம் வாங்கியவர்களுக்கு நன்றி, இந்த விருது உன்னுடையது கிடையாது இதற்கு முழுக்காரணம் என் அப்பா அம்மாதான்.
சினிமாவில் எனக்கு எல்லாம் தெரிஞ்சு ஏதோ பண்ணி இருக்கேன் என்றால் அதற்கு காரணம் அவங்கதான்.
ஒன்பது மாசம் குழந்தையிலிருந்து என் னை நடிக்க வைத்து ஒவ்வொரு பாடத்தையும் கற்று தந்தனர்.
குறித்த விருது அவர்களுக்கு உரியது.
இப்படி ஒரு அம்மா அப்பா எனக்கு அடுத்த ஜென்மத்துல கிடைக்குமா என்பது தெரியாது.
எல்லா குழந்தைகளுக்கும் இந்த மாதிரி அம்மா அப்பா கிடைக்கணும்.
எல்லோருக்கும் நன்றி அன்று அந்த நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் பேசியிருந்தார்.
