தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல படங்களை தயாரித்த எம்.முத்துராமன் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.
இதற்கமைய இவர் இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் ராஜமரியாதை, மூடு மந்திரம், நலந்தானா , ஆயிரம் ஜென்மங்கல் போன்ற பல்வேறு படங்களை முத்துராமன் தயாரித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல படங்கள் தயாரித்து தவிர்க்க முடியாத தயாரிப்பாளராக வலம் வந்தவர் இவர்.
மேலும் முத்துராமனின் மறைவிற்கு திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றமையும் குறிப்பிடதக்கது.



