தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை.

0

தற்போது அதிகரித்து வரும் ஒமிக்ரோன் வைரஸ் அச்சுறுத்த நிலையை தொடர்ந்து , தமிழகத்தில் ஜனவரி 31ஆம் திகதிவரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒன்று முதல் ஒன்பது வரையிலான வகுப்புகளுக்கு எதிர் வரும் 31 ம் திகதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன் ஒன்று முதல் ஒன்பது வரையிலான வகுப்புகளுக்கு ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பொதுத் தேர்வு நடைபெறும் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு விடுமுறை கிடையாது எனவும் அந்த வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளுக்கும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விடுமுறை நீடிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு மருத்துவ கல்லூரி, கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply