ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு.

0

வருடந் தோறும் பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்தநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது மரபு.

இவற்றுள் அங்க நல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றதாக கருதப்படுகிறது.

குறித்த ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக வருவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு கொவிட் தொற்றுப் பரவல் காரணத்தால் பல்வேறு கட்டுபாடுகளை அரசு விதித்துள்ளது.

இதனால் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? என பலரும் கவலையில் இருந்தாலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.

தொடர்ந்தும் அலங்காநல்லூரில் வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக ஜல்லிக்கட்டு முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நேற்றைய தினம் அதிகாலை நடை பெற்றது.

இந்நிலையில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Leave a Reply