சந்தையில் தற்போது மரக்கறிகளின் விலை அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் கடந்த நாட்களை விட நேற்றைய தினம் சந்தையில் மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன் மரக்கறிகளை வாங்க நுகர்வோரிடம் அதிக கேள்விகள் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
தம்புள்ளை,தம்புத்தேகம மற்றும் கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையங்களுக்கு இன்று அதிகளவான மரக்கறிகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவற்றை வாங்குவதற்கு பொது மக்களின் வருகை ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாக பொருளாதார மையங்கள் உள்ள வியாபாரிகள் தெரிவித்தனர்.



