பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிக்காமல் விளக்கு ஏற்றலாமா?

0

பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றுபவர்கள் முதலில் நிலை வாசலில் விளக்கை ஏற்றி விட்டு பின்பு பூஜை அறைக்கு சென்று விளக்கு ஏற்ற வேண்டும்.

முக்கோடி முப்பத்து தேவர்களும், அகிலம் ஆளும் தெய்வங்களும் பிரம்ம முகூர்த்தத்தில் பூமியில் உலா வருவதாக ஐதீகம் உண்டு.

எனவே வாசல் தெளித்து கோலம் போட்டு, நிலை வாசலில் விளக்கு ஏற்றி வைத்தால் அவர்கள் நம் வீட்டிற்குள் வருவார்கள் என்பது ஐதீகம்.

அதன் பின்பு பூஜை அறையில் இருக்கும் தெய்வங்களுக்கு விளக்கு ஏற்றி வைக்கலாம்.

இப்படி பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கை ஏற்றி விட்டு பின்பு மறுபடியும் தூங்கலாமா? என்கிற சந்தேகம் பலருக்கும் எழும்.

தேவர்களும், தெய்வங்களும் உங்களை ஆசீர்வதிக்கும் பொழுது உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் அப்படியே நடக்கட்டும் என்று வாழ்த்துவார்கள்.

அந்த சமயத்தில் நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தால், அப்படியே உங்கள் வாழ்க்கை அமையட்டும் என்று கூறி விடுவார்கள்.

அனைத்து தேவர்களும், தெய்வங்களும் ஆசீர்வாதம் நமக்கு அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது.

ஆனால் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழும் பொழுது இத்தகைய வரம் கிடைக்கிறது என்பதை தொன்று தொட்டு நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தார்கள்.

வாழ்க்கையில் பெரிய இடத்திற்கு சென்ற பல சாதனையாளர்களின் கதையைக் கேட்டால் அவர்கள் அதிகாலையிலேயே எழும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள்.

ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும், போகப் போக உங்களுக்கு அதுவே பழகிவிடும்.

பத்து நாள் இப்படி பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து வழிபாடு செய்து உங்கள் அன்றாட வேலைகளை செய்து பாருங்கள், நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றம் நிகழும்.

Leave a Reply