நாட்டின் சில பகுதிகளில் 16 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொழும்பின் சில பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் 16 மணித்தியால நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும்.
இதன் பிரகாரம் கொழும்பு, தெகிவளை, கல்கிஸ்ஸ , கோட்டே மற்றும் கடுவளை மாநகரசபை அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இவற்றை விட மகரகம , பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் , கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் நாளை மறுதினம் 16 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும்.



