கொழும்பு கடலில் கிடக்கும் எரிபொருள் கப்பல்கள்.

0

நாட்டில் தற்போது அதிக டொலர் நெருக்கடி நிலவி வருகின்றது.

இதன் காரணமாக இலங்கைக்கு எரிபொருளை கொண்டு வந்த கப்பல்களில் இருந்து தரையிறக்கும் பணி இடம்பெறாது என ஐக்கிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த நேரத்தில் டொலர்கள் கிடைக்கப்பெறாத காரணத்தினால் கப்பல்களுக்கான தாமதக் கட்டணமாக அதிகளவு டொலர்களை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

டீசல் கப்பல் ஒன்று 11 நாட்களில் வந்துள்ளதாகவும் கடந்த 28ஆம் திகதி வந்த பெற்றோல் கப்பலில் இருந்து இதுவரை தரையிறக்கம் நடைபெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply