டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு.

0

நாட்டில் தற்போது டெங்கு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் இந்த ஆண்டு முதல் ஐந்து நாட்களுக்குள் 1,227 டெங்கு நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின், சமூக வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பு, கம்பஹா. களுத்துறை, கண்டி,குருநாகல், புத்தளம், காலி,யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, இரத்தினபுரி ஆகிய டெங்கு அவதானம் கூடிய இடங்களிலேயே இந்த வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply