மக்களின் பாதுகாப்புக்காக கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இலங்கையில் அதிக மக்கள் சினோபார்ம் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர்.
இதற்கமைய குறித்த தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பில் பேராசிரியர் வைத்தியர் சன்ன ஜயசுமன முக்கிய தகவல் ஒன்றை அறிவித்துள்ளார்.
அதாவது சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பு ஊசியின் செயற்திறன் மூன்று மாதங்களில் குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய தடுப்பூசிகளின் செயற்திறன் குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும்.
இருப்பினும் அதிக இலங்கையர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியே செலுத்தப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் சினோபார்ம் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மூன்று மாதங்களின் பின்னர் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



