நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் மீண்டும் ஒரு மின் தடை ஏற்படும் என இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் டீசல் தட்டுப்பாடு காரணமாக சப்புகஸ்கந்த அனல் மின் நிலையம் மூடப்பட்டுள்ளது.
அத்துடன் எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தொழிற்சங்க சம்மேளனத்தின் அழைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டமையினால் 160 மெகா வொட்ஸ் மின்சாரம் தேசிய மின் கட்டணத்திற்கு இழக்கப்பட்டுள்ளது அவர் குறிப்பிட்டுள்ளார்.



