இலங்கை போக்குவரத்து பேருந்து சாலை சாரதி நடத்துகிறார்கள் அதிகாலையிலேயே கொட்டும் மழையில் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கமைய குறித்த போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.
அத்துடன் தங்களது முகாமையாளரை உடனடியாக இடம் மாற்றக் கோரியும் புதியதொரு முகாமையாளரை தங்களுக்கு நியமித்து தரும்படி கோரியும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது உள்ள முகாமையாளர்களால் கடந்த காலங்களில் அதிகளவிலான பாதிப்புகளுக்கு நாம் உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் , இவ்வாரு சாரதி நடத்துனர்களுக்கு இடையே முறுகல் நிலை ஏற்படுத்திவருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இன்றைய தினத்திற்குள் ஒரு தீர்வு கிடைக்காத பட்சத்தில் நாளைய தினம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போராட்டகாரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



