இலங்கையில் 15 வயதிற்கு மேற்பட்ட சகல இளைஞர் யுவதிகளுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டையினை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பிளாக் செயின் எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இது தடுப்பு ஊசியை அடையாள அட்டை தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இது இளைஞர்களின் கல்வி, தொழில்சார் தகுதிகள் மற்றும் ஏனைய தகுதிகளுக்கான தரவு தளமாக இயங்கும்.
மேலும் குறித்த இலத்திரனியல் அடையாள அட்டைகளை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் தமித்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.



