தமிழக வானிலை ஆய்வு மையம் தகவல்.

0

கடந்த வாரம் தமிழகத்தில் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கன மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்தது.

இதன் பிரகாரம் தென் தமிழக கடற்கரையை ஒட்டியும், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடலை ஒட்டிய இலங்கை பகுதியிலும் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் காரணமாக, இன்று தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அவ்வாறு நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

ஏனைய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் மற்றும் சென்னை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply