நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நாங்கள் தயார்.

0

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நாங்கள் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு ராஜபக்சவினரின் ஆண்டு அல்ல எனவும் அது தமது தரப்பினரின் அரசாங்கம் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பேருவளையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் தொடர்ச்சியாக செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ராஜித சேனாரத்ன நாட்டு மக்களுக்கு மூன்று வேளை உணவை வழங்கி, நோயாளிகளுக்கு தேவையான மருந்துங்களை வழங்கி, நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தயாராக இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply