நாட்டில் நிலவும் தற்போது பொருளாதார நெருக்கடி காரணத்தால் நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் காளி பெலிகஹா பிரதேசத்தில் உள்ள அரிசி மொத்த விற்பனை நிலையத்திற்கு முன்பாக அரிசியை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
அத்துடன் நேற்றைய தினம் காலை முதல் காலி பெலிகஹா பிரதேசத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அரிசி தட்டுப்பாடு வராது என்ற நம்பிக்கையில் மக்கள் கிடைத்த அரிசியை வாங்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் மொத்த விற்பனையாளர்களுக்கு குறைந்த அளவிலான அரிசியே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



