முதலில் இவ்வாறான பிரச்சனையை சரி செய்வதற்கு நாட்டு மருந்து கடைகளில் வலம்புரிக்காய், இடம் பிடித்தாய் இவற்றை வாங்கிக் கொண்டு, அதில் ஒவ்வொன்றிலும் பத்து, பத்து என்ற அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி, பஞ்சு திரி போட்டு, தீபம் ஏற்றிக் கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த வலம்புரி, இடம்புரி காயையும் விளக்கில் காட்டி எரித்து அதன் சாம்பலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இந்தப் பூஜையைச் செய்பவர்கள் அவர்களி உபயோகிக்கும் துணியில் இருந்து சிறிதளவு துணியை எடுத்து அதனை விளக்கில் எரித்து சாம்பலாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் உங்கள் உங்கள் வாழ்க்கைத் துணை உபயோகிக்கும் துணியையும் சிறிதளவு எடுத்துக்கொண்டு, அதனையும் எரித்து சாம்பலாக்கி கொள்ள வேண்டும்.
பின்னர் இதில் சுத்தமான நெய் ஊற்றி கலந்து கொண்டு, இதனை தாயத்தில் சேர்த்து இடுப்பில் கட்டிக் கொள்ளலாம்.
அல்லது நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் கணவன் மனைவி இடையே இருக்கும் சண்டைகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும்.
