ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பத்திரிகை ஆசிரியர்களை நேற்றைய தினம் சந்தித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த சந்திப்பிற்கு சில பத்திரிகைகளின் ஆசிரியர் களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவில் இருக்கும் சிலர், திட்டமிட்டே இவ்வாறு அவர்களை அழைக்காமல் புறக்கணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதிலும் குறிப்பாக அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கே இவ்வாறு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.



