தற்போது இலங்கையில் உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இதன் பிரகாரம் வீட்டுகளிலேயே தோட்டத்தினை உருவாக்குவதற்கு ஏதுவாக கவனம் செலுத்துமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு அரசாங்கம் மற்றும் வர்த்தக அமைச்சர் எதற்கு என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
கிராமப்புற மக்களுக்கு வீடுகளில் பயிரிடுவதற்கு வசதிகள் உள்ளன. ஆனால் நகர்ப்புற மக்களுக்கு அவ்வாறான வசதிகள் இல்லை.
அப்போது அவர்கள் என்ன செய்வது என்றும் அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறான அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தினால் வீட்டிலேயே சாவது எப்படி என்பதை மக்களுக்கு அரசாங்கமும் அமைச்சர்களும் கற்பிக்க வேண்டியிருக்கும் என்றும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.



