கொழும்பு, மட்டக்குளியில் இடம்பெற்ற நத்தார் கொண்டாட்டத்தின் போது வாள்வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அத்துடன் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் நத்தார் பண்டிகைக்காக நண்பர்களுடன் மதுபான விருந்து ஒன்று நடத்தியுள்ள நிலையில் அங்கிருந்த இளைஞர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த இளைஞனை கத்தியால் குத்தியதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் கடுமையான காயமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.



