சந்தையில் பச்சை மிளகாய் கறி மிளகாய் ஆகியவற்றின் விலையில் ஓரளவு வீழ்ச்சி.

0

கொழும்புக்கு அப்பால் உள்ள பொருளாதார மையங்களில் பச்சை மிளகாய் மற்றும் கறி மிளகாய் என்பவற்றின் விலைகளில் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்றைய தினம் கறிமிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 600 ரூபாய் என்ற அளவிலும் கெப்பட்டி பொல பொருளாதார மத்திய நிலையத்தில் 550 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.

அத்துடன் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் கறிமிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 540 ரூபாவாக பதிவாகியது.

அவ்வாறு தம்புள்ளை மற்றும் கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையங்களில் பச்சை மிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 500 ரூபாவாக காணப்பட்டது.

மேலும் நாரஹேன் பிட்டி பொருளாதார மையத்தில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய்யின் மொத்த விலை 850 ரூபாய் என்ற அளவில் காணப்பட்ட நிலையில் அதன் சில்லறை விலை ஆயிரம் ரூபாய் அளவில் காணப்படுகிறது.

Leave a Reply