முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்.

0

இந்தியாவில் ஒமிகிரோன் தொற்று மிக வேகமாக பரவி வருகின்றது.

இந்நிலையில் இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, தெலுங்கானா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களின் இந்த ஒமிக்ரோன் தொற்று பரவியுள்ளது.

இது வரையில் இந்தியாவில் 236 பேருக்கு இந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 34 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் 3 பேர் குணமடைந்துள்ளனர் என்பதுடன் மேலும் 24 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் தமிழகத்தில் ஒமிக்ரோன் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமை செயலகத்தில் இன்று காலை 11 :30 க்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

மேலும் குறித்த கூட்டத்தில் தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்துவது , கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply