அரச மருத்துவ அதிகாரி சங்கத்தினரின் போராட்டம் தொடர்பில் இன்று இறுதி முடிவு.

0

அரச மருத்துவ அதிகாரி சங்கத்தினரின் தொழிற்சங்க போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படும்.

இதற்கமைய இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ள சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தமது கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சர் கடிதம் மூலம் தீர்வு யோசனை அனுப்பியுள்ளதாக அந்த சங்கத்தின் மத்தியகுழு உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் கூட்டத்தில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply