அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்ந்து செல்கின்றது.
இந்நிலையில் 7 கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.
தமது கோரிக்கைக்கான் தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கான அனுமதியினை சுகாதார அமைச்சர் வழங்கும் வரையில் தொழிற்சங்க போராட்டம் தொடரும் என அரசு மருத்துவர்கள் சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
மேலும் வைத்தியர்களின் இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணத்தால் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
இதன் பிரகாரம் நோயாளர்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



