மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சோதனை.

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் சோதனையிடும் விசேட நடவடிக்கையை காவல்துறையினர் நேற்று தினம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சோதனை நடவடிக்கையின் போது மொத்தமாக 2,910 மோட்டார் சைக்கிள்களும்,2,640 முச்சக்கர வண்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

மேலும் இதன்போது குறித்த வாகனங்களில் பயணித்த 7,285 பேரில் 1,901 நபர்கள் சுகாதார விதிமுறைகளை மீறியதாக காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply