தமிழகத்தில் மாபெரும் முற்றுகைப் போராட்டத்திற்கு தயாராகும் குழுவினர்.

0

தமிழ்நாட்டில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பெரியசாமி, பொதுச் செயலாளர் தனசேகரன் ஆகியோரினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த அறிக்கையில் ஒமிக்ரோன் தொற்று பரவி வரும் நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு முக கவசம், கையுறை, சனிடைசர், கிருமிநாசினி உள்ளிட்ட நோய் தடுக்கும் உபகரணங்கள் வழங்கப்படும் என அரசினால் உத்தரவிடப்பட்டிருந்தது.

இருப்பினும் இதுவரை எந்த விதமான பொருட்களும் வழங்கப்படவில்லை.

. அத்துடன் டாஸ்மாக் கடைகளில் பணி நிரப்பல் மூலம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பாதுகாப்புப் பெட்டகம் அனைத்து கடைகளுக்கும் வழங்க வேண்டும்.

மேலும் நேரம் மாற்ற உத்தரவு காரணமாக பணியாளர்களுக்கு பாதிப்பு அதிகரி க்கின்றது.

ஆகவே நேர மாற்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் இது தொடர்பில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகவே மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள ஊழியர்கள் சட்டசபை தொடங்கும் நாளான ஜனவரி 5 ஆம் திகதியன்று அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொழிலாளர் நலனில் அக்கறை இல்லாத அலுவலகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்தி இந்த மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெறும்.

Leave a Reply